ஜனநாயகனுக்கு மேல பேனர் வச்ச பராசக்தி டீம்!.. இப்பவே ஆரம்பிச்சிட்டாங்களே!...
நடிகர் விஜயின் ஜனநாயகன் படம் 2026 பொங்கலை குறிவைத்து ஜனவரி 9ம் தேதியும், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ம் தேதியும் ரிலீஸாகவுள்ளது. இதுவரை விஜயின் படத்தோடு சிவகார்த்திகேயனின் படம் மோதியதே இல்லை. அஜித், ரஜினி போன்ற நடிகர்களின் படங்கள்தான் மோதியிருக்கிறது.
அடுத்த விஜய் சிவகார்த்திகேயன்தான் என சிலர் பேசும் நிலையில்தான் அவரின் பராசக்தி ஜனநாயனோடு மோதவிருக்கிறது. அதேநேரம் ஒரே தேதியில் ரிலீஸாகாமல் ஜனநாயகன் படம் வெளியாகி 5 நாட்கள் கழித்து பராசக்தி படம் வெளியாகிறது.
ஜனநாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். தெலுங்கில் பாலையா நடித்து வெற்றி பெற்ற பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியிருக்கிறது. அதேநேரம் விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் அரசியல் தொடர்பான சில காட்சிகளை படத்தில் சேர்த்திருக்கிறார்கள். எனவே, கமர்சியல் மசாலா படமாக படம் உருவாகியுள்ளது. அந்த பக்கம் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் பராசக்தி 1960களில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்புடையது என்கிறார்கள். இந்த படத்தில் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். . இந்த படத்திற்கும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையிதான் ஜனநாயகனுக்கும் பராசத்திக்கும் இடையேயான போட்டி தற்போதே துவங்கி விட்டது. சென்னை கிண்டி பகுதியில் உள்ள ஜோதி தியேட்டரில் பெரிய அளவில் பேனர் வைப்பதை திரையுலகினர் கௌரவமாக நினைக்கிறார்கள். ஏனெனில் சென்னையில் இருந்து வெளியேறும் போதும் சென்னைக்குள்ளே வரும்போதும் அந்த பேனர் எல்லோருடைய கண்ணிலும் படும். அந்த இடத்தில் ஜனநாயகன் படக்குழு ஒரு பெரிய பேனரை வைத்துவிட்டது. இதை பார்த்து ஷாக்கான பராசக்தி படக்குழு தியேட்டர் நிர்வாகத்திடம் பேசி ஜனநாயகன் பேனருக்கு மேல் அவர்களின் பிளக்ஸ் பேனர் வைத்து விட்டார்கள். தற்போது ஜனநாயகன் பேனருக்கு மேல் பராசக்தி பேனர் இருக்கிறது. இது விஜய் ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது.

எனவே, பராசக்தி படக்குழுவையும், சிவகார்த்திகேயனையும் அவர்கள் திட்டி வருகிறார்கள். ‘நீ மேலே பேனர் வைத்தாலும் எங்க தலைவருக்கு கீழ்தான்’ என்பது போல அவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதே புகைப்படத்தை விஜய்க்கு பிடிக்காதவர்கள் பகிர்ந்து ‘துணிவு வரும் போது இப்படித்தான் நடந்தது. அப்போது அஜித் விஜயை அசிங்கப்படுத்தினார். இப்போது சிவகார்த்திகேயன் விஜயை அசிங்கப்படுத்தி இருக்கிறார்’ என்றெல்லாம் பதிவிட்டு சந்தோஷப்படுகிறார்கள். இந்த பேனரால் எக்ஸ் தளத்தில் விஜய் ரசிகர்களுக்கும், சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும், இடையே மோதல் எழுந்துள்ளது.
