×

12 நாள் குழந்தைக்கு எமனான வளர்ப்பு நாய்… கைதான பெற்றோர்!

இங்கிலாந்தில் பிறந்த குழந்தை ஒன்றை அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாயே கடித்துக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இங்கிலாந்தில் பிறந்த குழந்தை ஒன்றை அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாயே கடித்துக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் ஜாய்ன்ஸ் மற்றும் அபிகெய்ஸ் எல்லிஸ் என்ற தம்பதிகளுக்கு 12 நாட்களுக்கு முன்னதாக குழந்தை பிரந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து குழந்தை வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாயே அந்த குழந்தையை கடித்துள்ளது. இதனால் குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையை பாதுகாப்பதில் அலட்சியமாக இருந்ததற்காக பெற்றோர் ஸ்டீபன் ஜாய்ன்ஸ், அபிகெய்ஸ் எல்லிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாயை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவமானது இங்கிலாந்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News