Anbe Diana Box Office : 2 நாட்களில் பாரி இளவழகனின் 'அன்பே டயானா' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Jul 19, 2026, 06:43 IST
2 நாட்களில் 'அன்பே டயானா' செய்த வசூல் தெரியவந்துள்ளது. பொதுவாக ரொமான்டிக் காமெடி டிராமா படங்கள் இளைஞர்களை டார்கெட் செய்து தான் எடுப்பார்கள்.
அவர்களுக்காக நேற்று முன் தினம் (ஜூலை 17-ஆம் தேதி) தியேட்டர்களில் வெளியான படம் தான் 'அன்பே டயானா'. இதில் ஹீரோவாக 'ஜமா' புகழ் பாரி இளவழகன் நடித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி, இவரே படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். பாரிக்கு ஜோடியாக 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' புகழ் ரம்யா ரங்கநாதன் நடித்திருக்கிறார்.
இந்த படம் டார்கெட் ஆடியன்ஸிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறது. தற்போது, இப்படம் கடந்த இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ.1.29 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
