Anbe Diana Box Office : 3 நாட்களில் பாரி இளவழகனின் 'அன்பே டயானா' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Jul 20, 2026, 07:43 IST
3 நாட்களில் 'அன்பே டயானா' செய்த வசூல் தெரியவந்துள்ளது. இந்த 2026-ஆம் வருட தொடக்கத்தில் இருந்தே 'யூத், வித் லவ், இதயம் முரளி, ஹாப்பி ராஜ்' போன்ற ரொமான்டிக் டிராமா ஜானர் படங்கள் அதிகம் வந்து கொண்டிருக்கிறது.
அப்படி இதே ஜானரில் கடந்த ஜூலை 17-ஆம் தேதியும் ஒரு படம் வந்திருக்கிறது. படத்தின் பெயர் 'அன்பே டயானா'. இந்த படத்தை இயக்கி, நடித்திருக்கிறார் பாரி இளவழகன்.
கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன் நடிக்க, முக்கிய ரோல்களில் ரோஜா செல்வமணி, 'பரிதாபங்கள்' கோபி, சேத்தன், சுதர்சன் காந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் இளசுகளை கவர்ந்து லைக்ஸ் போட வைக்கிறது. தற்போது, இப்படம் கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.2.73 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
