Anbe Diana Box Office : 5 நாட்களில் பாரி இளவழகனின் 'அன்பே டயானா' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Jul 22, 2026, 07:20 IST
5 நாட்களில் 'அன்பே டயானா' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 2024-ல் வெளிவந்த படம் 'ஜமா'. இதன் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகியிருந்தார் பாரி இளவழகன்.
இந்த படத்தில் நடித்தது மட்டுமில்லாமல், அவரே இயக்குநர் சீட்டில் அமர்ந்து டைரக்ட்டும் செய்திருந்தார். இதையடுத்து பாரி நடித்து, இயக்கியுள்ள படம் தான் 'அன்பே டயானா'.
இதில் இவருக்கு ஜோடியாக 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். இதற்கு 'மாவீரன்' புகழ் பரத் சங்கர் தான் இசையமைத்துள்ளார்.
ரொமான்டிக் காமெடி டிராமா ஜானர் படமான இது கடந்த ஜூலை 17-ஆம் தேதி வெளிவந்து முதல் நாள் ரூ.34 லட்சம் மட்டுமே வசூலித்திருந்தது. இப்போது படிப்படியாக முன்னேறி கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.3.18 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.
