Anbe Diana Box Office : பாரி இளவழகனின் 'அன்பே டயானா' முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Anbe Diana day 1 collection

'அன்பே டயானா' முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது. 'ஜமா' என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், இயக்குநராகவும் அறிமுகமானவர் பாரி இளவழகன்.

இவர் இயக்கி, நடித்திருக்கும் புது படம் தான் 'அன்பே டயானா'. இப்படம் நேற்று (ஜூலை 17-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

இதில் ஹீரோயினாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் சேத்தன், செல் முருகன், ரோஜா, இஸ்மத் பானு, 'பரிதாபங்கள்' கோபி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.34 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web