Parimala and Co Box Office: 3ம் நாளில் 11 சதவீதம் அதிகரித்த வசூல்

குடும்பபாங்கான கதைகளை  எடுப்பதில் சிறந்தவரான பாண்டிராஜ் இந்த முறை கொஞ்சம் வித்யாசமாக திர்ல்லர் கதையை கையில் எடுத்துள்ளார்
 
parimala and co

குடும்பபாங்கான கதைகளை  எடுப்பதில் சிறந்தவரான பாண்டிராஜ்  இந்த முறை கொஞ்சம் வித்யாசமாக திர்ல்லர் கதையை கையில் எடுத்துள்ளார். அதில் தனது வழக்கமான காமெடியை தூவி கொத்துள்ளார். ஆனாலும் திரைகதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று பலரும் கூறுகின்றனர். 

பரிமளா அண்ட் கோ படத்தில்  ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா , மிஷ்கின் என பலரும் நடித்துள்ள இந்த படம் விடுமுறி தினங்களான சனிக்கிழமை மற்றும் நேற்று ஆகிய இரு தினங்களிலும் நல்ல வசூல் செய்துள்ளது.

parimala and co

இந்த நிலையில் நேற்று இப்படம் செய்துள்ள வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்லன. sacnilk இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி மொத்தம் 1223 காட்சிகள் நடைபெற்ற நிலையில் நெட் கலெக்சனாக 5.83 கோடி, கிராஸ் கலெக்சனாக ரூ 6.70 கோடி வசூல் செய்துள்ளது.  நேற்று மட்டுமே ரூ. 2.23 கோடி வசூல் செய்திருக்கிறது இப்படம் இது கிட்டத்தட்ட 11.5 % அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்று முதல் வேலை நாட்கள் என்பதால் வசூல் குறைய வாய்புள்ளது என பலரும் கூறுகின்றனர்.
 

Tags

From Around the web