காமெடி to ரைட்டர்!.. பல படங்களிலும் கலக்கும் பரிதாபங்கள் டிராவிட்!...

பரிதாபங்கள் யுடியூப் சேனல் மூலம் பிரபலமான டிராவிட் தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.
 
dravid

பல வருடங்களாகவே பரிதாபங்கள் எனும் யுடியூப் சேனலில் கலக்கி வருபவர் டிராவிட். கோபியும், சுதாகரும் ஒருபக்கம் கலக்கினாலும், ஒருபக்கம் டிராவிட்டும் அசத்தலாக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்துவிடுவார். பரிதாபங்கள் சேனலின் பல வீடியோக்களில் டிராவிட் பெண் வேடத்திலும் நடித்திருக்கிறார்..

ரசிகர்களிடம் பிரபலமானாலே அடுத்து சினிமாதான் என்பதற்கு டிராவிட்டும் விதிவிலக்கல்ல. ஏற்கனவே டியூட் உள்ளிட்ட சில திரைப்படங்களில் டிராவிட் நடித்திருக்கிறார். மேலும் விரைவில் அதர்வா நடிப்பில் வெளியாகியுள்ள இதயம் முரளி படத்திலும் டிராவிட் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் என்னை உதவி இயக்குனராக சேர்த்துக்கொளுங்கள் என்று கேட்டுதான் ஆகாஷ் பாஷ்கரனிடன் டிராவிட் போயிருக்கிறார். எனவே அவரை ஆகாஷ் பாஷ்கரன் வசனங்களை எழுத சொல்லியிருக்கிறார். இந்த கால ஜென்சி தலைமுறைக்கு ஏற்றவாறு டிராவிட் எழுதி கொடுத்த வசனங்கள் ஆகாஷ் பாஸ்கரனுக்கு மிகவும் பிடித்துப்போய்விட படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கு டிராவிட்டை வசனம் எழுத வைத்திருக்கிறார். அதோடு படத்தின் டைட்டில் கார்டிலும் அவருக்கு கிரெடிட் கொடுக்கப் போகிறார்களாம்..

இது டிராவிட்டை எங்கே போய் நிறுத்தியிருக்கிறது என்றால் ஜித்து மதன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் மலையாள படம்., தெலுங்கு பட இயக்குனர் கல்யான் ஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்திற்கும் தமிழ் வெர்சனுக்கு டிராவிட் வசனங்களை எழுதி கொடுத்திருக்கிறாராம்.

யுடியூப்பில் தொடங்கிய டிராவிட்டின் வாழ்க்கை நடிகர், எழுத்தாளர் என சினிமாவில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறது. விரைவில் டிராவிட் இயக்குனரானாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்..

Tags

From Around the web