×

இதல்லவா சாதனை… யோகி பாபு படத்தின் பார்ட் 2 தயாராகிறது!

யோகி பாபு முதன் முதலாக கதாநாயகனாக நடித்த தர்ம பிரபு படத்தின் பார்ட் 2 உருவாக்கும் வேலையில் இயக்குனர் முத்துக்குமரன் ஈடுபட்டுள்ளார்.

 

யோகி பாபு முதன் முதலாக கதாநாயகனாக நடித்த தர்ம பிரபு படத்தின் பார்ட் 2 உருவாக்கும் வேலையில் இயக்குனர் முத்துக்குமரன் ஈடுபட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக யோகி பாபு உள்ளார். அவர் சம்பளமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஆனாலும் தினசரி அவரை நோக்கி தயாரிப்பாளர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் ஹீரோவாக நடித்த தர்மபிரபு என்ற திரைப்படத்தின் பார்ட் 2 இப்போது உருவாகியுள்ளது.

இதை அந்த படத்தின் இயக்குனர் முத்துக்குமரன் உறுதிப் படுத்தியுள்ளார்.  அப்படி அந்த உருவானால் நகைச்சுவை நடிகர் ஒருவர் நடித்த படத்தின் முதல் பார்ட் 2  திரைப்படம் என்ற சாதனையை அது நிகழ்த்தும்.

From around the web

Trending Videos

Tamilnadu News