×

தேசிய விருதுக் குழுவையே குழப்பிய பார்த்திபன்... இதற்காகத்தான் இப்படி விருது கொடுத்தார்களாம்!

பார்த்திபன் இயக்கி, நடித்திருந்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
தேசிய விருதுக் குழுவையே குழப்பிய பார்த்திபன்... இதற்காகத்தான் இப்படி விருது கொடுத்தார்களாம்!

2019ம் ஆண்டுக்கான 67வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த தமிழ் படம், சிறந்த நடிகர் என நடிகர் தனுஷின் அசுரன் படத்துக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், பார்த்திபன் இயக்கி, நடித்திருந்த ஒத்த செருப்பு படத்துக்கு சிறப்பு ஜூரி விருது மற்றும் சிறந்த ஒலிப்பதிவுக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

கோலிவுட் மொத்தம் 7 விருதுகளை வென்றிருக்கிறது. விஸ்வாசம் படத்தின் பாடல்களுக்காக இசையமைப்பாளர் டி.இமானுக்கும், கே.டி (எ) கருப்புதுரை படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது நாகவிஷாலுக்கும் அறிவிக்கப்பட்டன. அதேபோல், சிறந்த துணை நடிகர் விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 


பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு விருது கொடுக்கப்பட்டது குறித்து ஜூரி குழுவில் இடம்பெற்றிருந்த கங்கை அமரன் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், ``பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்கு எந்தப் பிரிவில் விருது கொடுப்பது என ஜூரி குழுவினரே குழம்பிப் போயினர். அந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம் என அனைத்தையுமே பார்த்திபனே செய்திருந்தார். அனைத்துமே சிறப்பாக இருந்ததாலேயே சிறப்பு ஜூரி விருது அந்தப் படத்துக்குக் கொடுக்கப்பட்டது’’ என்று கூறியிருக்கிறார்.  

From around the web

Trending Videos

Tamilnadu News