என்னை இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல... அஜித் வீட்டில் அஞ்சலி செலுத்திய பின் பார்த்திபன் வருத்தம்!
அஜித் தயார் மரணம்:
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் அஜித் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவர் கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித்தின் தாயாரான மோகினி (85) முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் காலமானார் .

அவரின் இறுதிச்சடங்கு சென்னை பெசன்ட் நகரில் மின் மயானத்தில் நடைபெற்றது. அஜித்தின் தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரை துறையை சேர்ந்த பல பிரபலங்களும் நேரில் வந்து சென்றனர். அப்போது நடிகர் பார்த்திபன் கையில் ஒரு முழம் பூ மட்டும் வாங்கி வந்து தாயாருக்கு அஞ்சலி செலுத்தினார்.
பார்த்திபன் வருத்தம்:
அதனை பிரபலமான youtube சேனல் ஒன்று வீடியோ எடுத்து அம்புக்குறி இட்டு காட்டியதை மனம் வருத்தத்தோடு இயக்குனர் பார்த்திபன் பதிவு ஒன்றே இட்டு இருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது.... நான் கொண்டு சென்ற சிறிய மாலையை இப்படி அம்புக்குறி இட்டு காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

நான் பெரிய மாலைகள் எடுத்துச் சென்று இருந்தால் பெரிய மாலை என்பதால் உடனே ஒதுக்கப்பட்டு விடுவேன். சிறிய பூ கொண்டு சென்றதால் கடைசி வரை அம்மாவின் காலடியில் நீண்ட நேரம் என்னுடைய இந்த கண்ணீர் பூக்கள் இருந்தன என பதிவிட்டு இருக்கிறார் . அவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் உங்களோட சிந்தனையே வித்தியாசமானது சார்... அம்புக்குறி தப்பியது ஆனால், உங்கள் அன்பு குறி தப்பவில்லை சார் என பதிவிட்டு வருகிறார்கள்.
