பாரதிராஜா இறப்பிலே தெரிஞ்சிது.... அன்றே கணித்த பார்த்திபன்!
தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குனரும் ஆன பார்த்திபன் பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி அதன் பிறகு திரைப்பட இயக்குனராகவும் இன்று நடிகராகவும் உயர்ந்த அந்தஸ்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய குருவின் மரணத்தை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாமல் பெரும் அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் அவரது மரணத்தில் மரண செய்தியை கேட்டு ஓடோடி வீட்டிற்கு வந்து அவரை எடுத்து அடக்கம் செய்யும் வரை பாக்கியராஜின் வீட்டிலேயே கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக அங்கேயே அனைத்து பணிகளையும் எடுத்து செய்தார் .

இந்த நிலையில் தற்போது தன்னுடைய குருவின் மரணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்களை குறித்து பேசிருக்கும் நடிகர் பார்த்திபன் இயக்குனர் இமயம் பாரதிராஜா சாரே இறுதிச் சடங்கிலேயே எங்க டைரக்டரை பார்க்கும்போது சுருங்கி போய் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

அப்பவே என் மனசுக்குள்ள என்னமோ ஆகப்போகுது அப்படின்னு தோணுச்சு. நான் ஒருத்தர்கிட்ட பேசும்போது கூட அவருக்கு ஏதோ ஒன்னு ஆகப்போகுது என்று அவரையே தான் பாத்துட்டு இருந்தேன். அங்க தான் அவரை நான் கடைசியா பார்த்தது. அதுக்கப்புறம் அவரோட இறுதிச்சடங்குல தான் நான் என்னோட டைரக்டரை பார்த்தேன் என்று பாக்கியராஜின் மரணம் குறித்து பார்த்திபன் மிகுந்த வேதனையோடு தன்னுடைய வலிகளைப் பகிர்ந்து கொண்டார்.
