இதுக்கே 100 கோடி கொடுக்கலாமே!.. அஜித்தை வெட்கப்பட வைத்த பார்த்திபன்!

தமிழ் சினிமாவில் எதையும் வித்தியாசமாக யோசிக்கக்கூடியவர் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்
 
ajith parthiban

தமிழ் சினிமாவில் எதையும் வித்தியாசமாக யோசிக்கக்கூடியவர் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன். நடிப்பு, இயக்கம் மட்டுமின்றி தனது பேச்சிலும் எழுத்திலும் தனித்துவத்தைக் காட்டக்கூடியவர். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அதை நகைச்சுவையுடனும் வார்த்தை விளையாட்டுடனும் வெளிப்படுத்துவது பார்த்திபனின் தனிச்சிறப்பு.

புதிய பாதை, ஒத்த செருப்பு, இரவின் நிழல் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தனது வித்தியாசமான சினிமா முயற்சிகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தவர் பார்த்திபன். சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து சுவாரஸ்யமான பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த விழாவின்போது ஒருவரிடன் பேசிக்கொண்டிருந்த அஜித் திடீரென திரும்பினார். அப்போது அவருக்கு பின் நின்றிருந்த ஷாலினி மீது  மோதினார். இதனைக் கண்ட அஜித் ஷாலினியிடம் ஒரு க்யூட் ரியாசன் கொடுத்துவிட்டு சென்றார். இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது.

parthiban

இந்நிலையில், அஜித்குமார் குறித்து பார்த்திபன் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான பதிவு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.  அதில் நேற்று இந்த போட்டோவை அஜித்திடம் காட்டி, கட்டிப்பிடித்து முத்தமிட்டு, இந்த ரொமாண்டிக் லுக்கிற்கே 100 கோடி உங்களுக்குக் கொடுக்கலாம் என்று நான் கூறி அவரை நாணச் செய்தேன். அவரின் பார்வையில் அவருக்காக நவம்பர் 20ல் பிறந்தவருக்கு எவ்வளவு வெட்கம் பிறந்திருக்கும்? எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஷாலினியின் பிறந்தநாளான நவம்பர் 20ஆம் தேதியைச் சுட்டிக்காட்டி, அஜித் மீதான தனது அன்பையும் ரசனையையும் தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தியுள்ளார் பார்த்திபன்.
 

Sai Vikas
Sai Vikas

134 Articles

Sai vikas is an experienced digital journalist with 16years of expertise in online news reporting. He specializes in covering cinema and sports

From Around the web