×

இரு மொழிகளில் தயாராகிறது பார்த்திபனின் ஒத்த செருப்பு...

ஒத்த செருப்பு சைஸ்7 திரைப்படத்தை ஆங்கிலம் மற்றும் இந்தியில் தயாரிக்க உள்ளதாக பார்த்திபன் கூறியுள்ளார். 

 
இரு மொழிகளில் தயாராகிறது பார்த்திபனின் ஒத்த செருப்பு...

ஒத்த செருப்பு சைஸ்7 திரைப்படத்தை ஆங்கிலம் மற்றும் இந்தியில் தயாரிக்க உள்ளதாக பார்த்திபன் கூறியுள்ளார். 

ஒருவரே எழுதி இயக்கி நடித்து தயாரித்திருக்கும் இந்தப் படம் உலகின் முதல் முயற்சி, இந்தியாவின் மிக முக்கியமான முயற்சி இதுவாகும். இதற்கு முன்பு ஒருவர் மட்டுமே நடித்து சில படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், நடிப்பவரே எழுதி இயக்கியிருப்பது இதுவே முதல் முறையாம்.

இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதன் பின்னணி இசையை இசையமைப்பாளர் சி. சத்யாவும் ஒரு பாடலை சந்தோஷ் நாராயணனும் இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தை பார்த்திபன் தனது தயாரிப்பு நிறுவனமான, பயோஸ்கோப் பிலிம் ப்ரேமர்ஸின் கீழ் தயாரித்துள்ளார்.

ஒத்த செருப்பு திரைப்படத்தை ஆங்கிலம் மற்றும் இந்தியில் உருவாக்க முயற்சி செய்து வருவதாக பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், என் தமிழ் அழகு, என்னை கூடுதல் அழகாக்குவதும் தமிழ், தட்டுத்தடுமாறி ஆங்கிலமும், தப்பித்தவறி மற்ற மொழிகளும் பேச முயன்றதுண்டு.


 

From around the web

Trending Videos

Tamilnadu News