Categories: Cinema News latest news

ரஜினி டான்ஸ் ஆடுனது பிடிக்கல! பொறாமை இருக்க வேண்டியதுதான்.. அதுக்கு பார்த்திபன் இப்படியா?

நடிகர் பார்த்திபன் ஒரு பேட்டியில் ரஜினியை பற்றி கூறியது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உதவி இயக்குனராக அறிமுகமான பார்த்திபன் பாக்யராஜிடம்தான் உதவியாளராக இருந்தார். கிட்டத்தட்ட 16 படங்களை இயக்கிய பார்த்திபன் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். புதிய பாதை மற்றும் ஹவுஸ் ஃபுல் ஆகிய படங்கள் இவர் நடித்த படங்களில் வணிக ரீதியாக வெற்றிப்பெற்ற படங்களாகும்.

இவர் ஒருவரை பற்றி பேசுகிறார் என்றால் கவிதை நயத்துடன் பேசுகிறேன் என்ற வகையில் புரியாத வகையில் பேசி விடுவார். அப்படித்தான் இப்போது ரஜினி, கமல், சூர்யாவை பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது நிருபர் ஒருவர் பார்த்திபனிடம் ‘ஒவ்வொரு நடிகர் பெயரையும் சொல்கிறேன். அவர்களிடம் பிடிக்காத விஷயம் ஒன்றை சொல்லுங்கள்’ என கேட்டார்.

இதையும் படிங்க: கங்குவா பட சர்ச்சை.. பெர்ஷனல் வரைக்கும் போனது தப்பு! சத்யராஜ் பகிர்ந்த தகவல்

முதல் நடிகராக சூர்யாவின் பெயரை குறிப்பிட்டு கேட்ட போது ‘பிடிக்காதது என்று கேட்பதுதான் எனக்கு பிடிக்காத விஷயம். இருந்தாலும் பிடிக்காது என்றால் பொறாமை என்று சொல்லலாம். அந்த வகையில் சுதா கொங்கரா படத்தில் 20 வயது மதிக்கத்தக்க கேரக்டரில் நடிக்க வேண்டுமென்றால் நடிப்பார். ஆனால் என்னால் அப்படி நடிக்க முடியாது. அதனால் அது பிடிக்காது’ என கூறினார்,

அதன் பிறகு கமல் பெயரை குறிப்பிட்டு கேட்ட போது ‘கமல் எல்லாரையும் காதலிச்சாரு.. இப்போ ஏன் விட்டுட்டாருனு தெரியல’ என கூறினார். கடைசியாக ரஜினி பெயரை குறிப்பிட்டு கேட்ட போது ‘என்னால இப்ப ஆட முடியாது. ஆனால் சமீபகாலமாக ரஜினி நல்லா ஆடுறாரு. அதுவும் எனக்கு பிடிக்கல’ என கூறினார்.

இதையும் படிங்க: அடடடடா! அப்பப்பா.. நயன் நடிச்ச படத்தை பார்த்து மகன்கள் இருவரும் கொடுத்த ரியாக்‌ஷன்

சினிமாவில் வித்தியாசமான கதையம்சத்தில் படங்களை எடுத்து ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார் பார்த்திபன். ஒத்த செருப்பு, டீன்ஸ், இரவின் நிழல் போன்ற படங்கள் எல்லாமே ஒரு தனித்துவமான படங்களாகும்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini