தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் சமீபகாலமாக உலக முழுவதும் டிரெண்டாகி வரும் நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறார். ஹாலிவுட்டில் தமிழ் சினிமாவின் பெருமையை நிலைநாட்டியதில் இருந்து பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் கூட வசூலில் வாரி இறைத்தது. மேலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் நடிப்பில் இன்று வெளியான நானே வருவேன் படம் இதுவரைக்கும் நேர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஆனாலும் நாளை ரிலீஸ் ஆக இருக்கிற பொன்னியின் செல்வன் படத்திற்காக நானே வருவேன் படத்தின் தேதியை ஒத்தி வைத்திருக்கலாம் என திரையுலகை சார்ந்த பலரும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தாணு சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என அறிவித்து இன்று வெளியானது. இந்த நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கான சிறப்பு பத்திரிக்கை கூட்டம் நடந்தது. அதில் விக்ரம், ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி போன்றோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது இடையே வந்த பார்த்திபன், நானே வருவேன் என கூறி சிறிது நேரம் கழித்து இன்று நானே வருவேன் என அடம்பிடித்து நானே வந்தேன் என தனக்கே உரிய பாணியில் தனுஷ் படத்தை வச்சு செய்தார் மேடையில். இவர் பேச்சை கேட்டதும் பலரும் சிரித்தனர். அதன் பின் பேசிய பார்த்திபன் இல்லை, நான் இன்று தஞ்சாவூர் போக வேண்டியது. அதனால் வரமுடியாது என கூறியிருந்தேன். அதான் இப்பொழுது நானே வருவேன் என கூறினேன் என்று சொல்லி மழுப்பினார்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…