அவர நீயா பெத்த....? உன் சாவுக்கு எவனும் வரமாட்டான் - பார்த்திபன் வேதனை!
இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தன்னுடைய குருவான பாக்யராஜ் இறந்ததும் அதிர்ந்துபோய்விட்டார். அதன் பின்னர் அவரை அடக்கம் செய்யும் வரை தொடர்ந்து இரண்டு நாட்களும் அங்கேயே இருந்து அனைத்து பணிகளையும் செய்தார் .
இது பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த நிலையில் இறுதிச்சடங்கு வரை தான் செய்த பணிகளை பார்த்து பலர் விமர்சிப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் பார்த்திபன் வேதனையுடன் ஒரு விஷயத்தை பார்த்து இருக்கிறார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது.... என் குருவுக்காக அவர் இறப்புல எல்லா வேலையும் நான் செஞ்சேன். அவர் அஸ்தி எல்லாம் கூட கரைச்சுட்டு வீட்டுக்கு வந்தேன். அன்னைக்கே நைட்டே அசிஸ்டன்ட் ஒருத்தர் எனக்கு மெசேஜ் அனுப்புகிறார். அதாவது நீங்கதான் பாக்கியராஜ் பெத்து வளர்த்தீங்களா? அவரை அடக்கம் செய்வது வரை எல்லா வேலையும் நீங்களே எடுத்து செய்றீங்க?

அங்க பக்கத்துல இருக்கு இருக்கிறவங்களையும் கொஞ்சம் அனுசரிக்கணும். இப்படி எல்லாம் செஞ்சதால தான் உங்க பொண்டாட்டி புள்ள இல்லாமல் இப்படி கஷ்டப்படுறீங்க. கூடிய சீக்கிரம் பாரு நீயும் செத்து போயிடுவ உனக்கு கூட்டமே வராதுன்னு எனக்கு மெசேஜ் அனுப்புகிறார். அத படிச்சு பார்த்தவுடனே நான் தடுமாறி போயிட்டேன் என நடிகர் பார்த்திபன் விமர்சனத்திற்கு எதிரான தன்னுடைய வேதனையை பகிர்ந்துள்ளார்.
