தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான படைப்பால் புதுமையை புகுத்த விரும்புவர் நடிகர் பார்த்திபன். இவரின் ஒத்த செருப்பு படம் ஆஸ்கார் வரை சென்று தமிழ் சினிமாவிற்கே ஒரு பெருமையை கொடுத்த படம்.
சமீபத்தில் இவரின் இயக்கத்தில் நடித்து திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘இரவின் நிழல்’. இந்த படம் ஒரே காட்சியில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதிலும் தன்னுடைய வித்தியாசத்தை கொடுத்துள்ளார் நடிகர் பார்த்திபன்.
இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.இவர் இயக்குனராக இருந்தாலும் நடிப்பின் மேல் அலாதி பிரியம் உடையவர். முதலில் நடிக்க ஆசை பட்டு வந்த என்னை இந்த தமிழ் சினிமா இயக்குனராக பார்க்க ஆசைப்பட்டது. அதனால் தான் உதவி இயக்குனராக தன்னுடைய வாழ்கையை ஆரம்பித்ததாக கூறினார்.
மேலும் நடிக்க வேண்டும் என சினிமா பக்கம் போனால் ஏற இறங்க பார்க்கிறார்கள். இதுவே அஜித் ஒரு பைக்கை கொண்டு போய் நிறுத்தி நடிக்க வாய்ப்பு கேட்டால் உடனே நடிகராக ஆக்கி விடுகிறார்கள். நான் போய் வாய்ப்பு கேட்டால் மதிக்க மாட்டிக்கிறார்கள். என்னிடம் நடிக்க வேண்டும் என ஆசை தீப்பற்றி எறிந்தது என தன் அனுபவத்தை பகிர்ந்தார்.
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…
Idli kadai…