Categories: Cinema News latest news

விரைவில் பல பிரபலங்களின் முகத்திரை கிழியும்…..கொதித்தெழுந்த தனுஷ் பட நடிகை….!

திரையுலகில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் காலம் காலமாக நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் வன்முறையின் உச்சக்கட்டமாக கடந்த 2017ஆம் ஆண்டு மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த சம்பவத்திற்கு பின்னர் மலையாள திரையுலகில் உள்ள பெண் நடிகைகளின் பிரச்சனைகளை விசாரிப்பதற்காக நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தனது அறிக்கையை 2019 ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே கேரள அரசிடம் சமர்பித்துவிட்டது. இருப்பினும், அந்த அறிக்கை இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.

தற்போது இத்தனை ஆண்டுகள் கடந்தும் அந்த அறிக்கை வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பிரபல மலையாள நடிகை பார்வதி கேரள அரசை நேரடியாக சாடியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “கேரள அரசு முடிந்தவரை இந்த அறிக்கையை வெளியிடும் செயல்முறையை முடக்க முயற்சிக்கிறது. இதனால், மூன்று ஆண்டுகளாக இந்த அறிக்கைக்கான காத்திருப்பு நீடிக்கிறது.

அடுத்த தேர்தல் வந்தவுடன் பாருங்கள், இந்த அறிக்கை திடீரென வெளிவரும். மேலும் பெண்களுக்கு ஆதரவான அரசாக இது மாறும். இது என்னுடைய கணிப்பு. எனவே தேர்தல் வரும் வரை காத்திருப்போம். அதேநேரம், இந்த அறிக்கை வெளிவந்தால் திரையுலகில் நாம் கொண்டாடும் பல முக்கிய பிரபலங்களின் முகத்திரைகள் கிழியும்” என மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்