×

என்னோட கல்யாணம் இப்படித்தான் நடக்கணும்... கண்டிஷன்களை அடுக்கும் பார்வதி
 

தனது திருமணம் ஆகாயத்தில் நடைபெற வேண்டும் என விரும்புவதாக நடிகை பார்வதி நாயர் தெரிவித்தார். 
 
 

அஜித்தின் `என்னை அறிந்தால்’ படத்தில் வில்லன் `விக்டர்’ அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் சில நேரம் பகிரும் கிளாமர் போட்டோக்கள் வைரலாகி டிரெண்டிங்கில் இடம்பிடிக்கும். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமண ஆசை குறித்து பேசியிருக்கிறார். 

அவர் பேசுகையில், ``திருமணங்கள் இடம்பெறும் விளம்பரங்களில் மணப்பெண்ணாக நடித்து எனது கரியரைத் தொடங்கியவள் நான். நான் நடித்த சில படங்களிலும் திருமணக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆன் - ஸ்க்ரீனில் நிறைய திருமணங்களில் பங்கேற்றுவிட்டேன். இதனால், எனது திருமண ஐடியாவே வித்தியாசமானது. ஆகாயத்தில் எனது திருமணம் நடக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏர் பலூன் அல்லது பிரைவேட் ஜெட்டில் முக்கியமானவர்கள் முன்னிலையில் எனது திருமணம் நடக்க வேண்டும் என நினைக்கிறேன். முக்கியமான இடங்களில் எல்லாம் ஏற்கனவே திருமணம் நடந்திருக்கும். அதனால், நான் ஏன் ஆகாயத்தில் திருமணம் செய்துகொள்ளக் கூடாது?

புரப்போஸ் பண்ணவும் என்னிடம் வித்தியாசமான ஐடியா இருக்கிறது. என்னை புரப்போஸ் பண்ணுகிறவர் கடலுக்கு அடியில் அண்டர்வாட்டரில் புரப்போஸ் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன்’’ என்று அதிரடி ஸ்டேட்மெண்ட் தட்டியிருக்கிறார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News