பசங்க பட குழந்தையா இது? குழந்தை குட்டிகளுடன் இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?
பரிமளா அண்ட் கோ திரைப்படம்:
பாண்டியராஜ் இயக்கத்தில் திரில்லர் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள பரிமளா அண்ட் கோ திரைப்படம் வருகிற மே 28-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த திரைப்படத்தில் ஜெயராம் , ஊர்வசி, மிஸ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
வித்தியாசமான கதை களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி, நடிகர் ராஜ்கிரன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் பசங்க திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமான நடித்து அளவில் பேமஸ் ஆன நடிகை தாரணி தற்போது பரிமளா அண்ட் கோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார் .

பசங்க நடிகை:
பட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் உங்களை பார்க்கிறோம். என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என கேட்டதற்கு நான் ஹவுஸ் வொய்ஃபா மகிழ்ச்சியா இருக்கிறேன் என தாரணி கூறினார். தன்னுடைய குழந்தைகளுடன் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த தாரணி குரல் முகபாவனை மற்றும் பாடி லாங்குவேஜ் உள்ளிட்டவை பசங்க திரைப்படத்தில் பார்த்தது போலவே அப்படியே இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள் .
