Connect with us
simbu

Cinema News

சிம்பு எவ்வளவு நல்லவர் தெரியுமா.?! தப்பான தகவல் சொல்லாதீங்க… வருத்தத்தில் புது இயக்குனர்.!

சிம்பு தற்போது  மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மிக உற்சாகமாக அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த படங்களுக்கு மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அவரை இயக்கும் இயக்குனர் எல்லாம் கூறுவது , சிம்பு முன்னர் போல அல்ல. அவர் தற்போது குறித்த நேரத்திற்கு ஷூட்டிங் வருகிறார். படத்திற்கான முழு ஒத்துழைப்பும் தருகிறார். என புகழாரம் சூட்டி வருகின்றனர். அப்படி சொன்னால் தானே, சரியான நேரத்தில் கால்ஷீட் கிடைக்குமோ என்னவோ.

அப்படி தான், தற்போது பத்து தல இயக்குனரும் கூறியுள்ளாராம். ஆம், சில நாட்கள் முன்னர் ஓர் செய்தி வெளியாகியது. சட்டையை கழட்டும் காட்சி ஒன்று பத்து தல படத்தில் இருந்துள்ளது எனவும், அதனை பார்த்த சிம்பு, நான் உடற்பயிற்சி மேற்கொண்டு கட்டுமாஸ்தான உடற்கட்டுடன் வருகிறேன் என கூறிவிட்டாராம்.

இதையும் படியுங்களேன் – இந்த போட்டோவ பாக்கும்போது கண்ணு கலங்குது… லெஜண்ட் அண்ணாச்சி செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!

இதனால் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது என செய்தி வந்தது. தற்போது இயக்குனர் தரப்பு அதனை மறுத்துள்ளது. அப்படி எல்லாம் இல்லை, கர்நாடகாவில் ஷூட்டிங் செய்தோம் . அங்கு மழை காரணமாக ஷூட்டிங் தொடர முடியவில்லை.

simbu3_cine

விரைவில், மதுரை, நாகரகோவில் பகுதியில் மீதி ஷூட்டிங் நடைபெறும் என கூறினாராம். எது உண்மை என விரைவில் இணையம் பக்கம் பார்த்தால்  தெரிந்து விடும். சிம்பு ஜிமிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால் அந்த செய்தி, அல்லது புகைப்படம் வெளியாகிவிடும் அப்போது தெரிந்து விடும் எது உண்மை என்று கூறுகிறார்கள் சினிமா வாசிகள்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top