Love Oh Love Box Office : 2 நாட்களில் பவிஷின் 'லவ் ஓ லவ்' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Love oh love 2 days collection

2 நாட்களில் 'லவ் ஓ லவ்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. பிரபல நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் புது படம் தான் 'லவ் ஓ லவ்'.

இதில் கதாநாயகியாக நாக துர்கா நடிக்க, முக்கிய ரோல்களில் செல்வராகவன், வனிதா, கே.எஸ்.ரவிகுமார், சௌந்தர்யா, ஆதித்யா கதிர், அஸ்வத் நடித்துள்ளார்கள். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு ஃபாக்ஸ்ன் இசையமைத்திருக்கிறார்.

மகேஷ் ராஜேந்திரன் என்பவர் இயக்கியிருக்கும் இப்படம் நேற்று முன்தினம் (ஜூலை 10-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது.

இதை 'Zinema மீடியா & எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் - கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது, இந்த படம் கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.45 லட்சம் வசூல் செய்துள்ளதாம்.

From Around the web