Love Oh Love Box Office : 4 நாட்களில் தனுஷின் அக்கா மகன் பவிஷின் 'லவ் ஓ லவ்' செய்த வசூல் இவ்ளோ தானா?

 
Love oh Love 4 days collection

4 நாட்களில் 'லவ் ஓ லவ்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. பவிஷ் ஹீரோவாக அறிமுகமான முதல் படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.'

இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்து, இயக்கியிருந்தார். தனுஷின் அக்கா மகன் தான் பவிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

பவிஷ் நடித்திருக்கும் இரண்டாவது படம் 'லவ் ஓ லவ்'. இதை அறிமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கியுள்ளாராம். இதில் ஹீரோயினாக தெலுங்கு நடிகை நாக துர்கா நடித்துள்ளார்.

கடந்த ஜூலை 10-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான இப்படத்தின் வசூல் முதல் நாளிலிருந்தே மிகவும் குறைவாக தான் இருக்கிறது. அதன்படி கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.72 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

From Around the web