Love Oh Love Box Office : பவிஷின் 'லவ் ஓ லவ்' படத்தின் முதல் நாள் வசூல் இவ்ளோ தானா?

 
Love oh love day 1 collection

'லவ் ஓ லவ்' படத்தின் முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது. நடிகர் தனுஷின் அக்கா மகன் தான் பவிஷ். இவர் தனுஷே இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

பவிஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் 'லவ் ஓ லவ்'. நேற்று (ஜூலை 10-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இந்த படத்தை அறிமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.

இதில் பவிஷுக்கு ஜோடியாக நாக துர்கா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் கே.எஸ்.ரவிகுமார், செல்வராகவன், ஆதித்யா கதிர், வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ஃபாக்ஸ்ன் இசையமைத்துள்ளார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.17 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web