தனுஷ் மருமகன் படம் ரிலீஸுக்கு ரெடி!.. எப்போன்னு பாருங்க மக்கா!..

 
lol

நடிகர் தனுஷின் மருமகனான பாவிஷ் நாராயண் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் நகைச்சுவை திரைப்படமான 'லவ் ஓ லவ்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காதல், நகைச்சுவை மற்றும் இளைஞர்களின் வாழ்க்கைச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், பொருள் ஆசை கொண்ட தனது காதலியால் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஒரு கார்ப்பரேட் ஊழியரின் கதையை சுவாரஸ்யமாக சொல்லவிருக்கிறது. காதலுக்கும் பணத்திற்கும் இடையே சிக்கிக் கொள்ளும் ஹிரோவின் வாழ்க்கையில் நிகழும் வேடிக்கையான தவறான புரிதல்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களே படத்தின் கதையாக அமைந்துள்ளது.

'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாவிஷ் நாராயண், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு யூடியூபர் நாக துர்கா நடித்துள்ளார். தமிழில் நாயகியாக அறிமுகமாகும் நாக துர்காவின் நடிப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. மேலும், செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 இயக்குநர் லட்சுமணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தற்போது  இயக்குநராக அறிமுகமாகிறார். வடசென்னையைச் சேர்ந்த இசை இரட்டையர்களான FOXn இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர். 

திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், வரும் ஜூலை 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags

From Around the web