×

தெறி சமந்தா போல் மாறிய நடிகை... அதுக்கு சமந்தா என்ன சொல்றாங்க பாருங்க!...

 
தெறி சமந்தா போல் மாறிய நடிகை... அதுக்கு சமந்தா என்ன சொல்றாங்க பாருங்க!...

தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சமந்தா. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். 

அதேபோல், மாடலாக இருந்து தற்போது நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ர லக்‌ஷ்மி. தற்போது இவருக்கும் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

pavi

இவர் விஜயுடன் சமந்தா நடித்த தெறி திரைப்படத்தில் ஒரு காட்சியில் சமந்தா தோன்றுவது போல, அவரை போலவே புடவை, அலங்காரம், மேக்கப் என அனைத்தையும் செய்து அந்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘மேடம். நான் பார்ப்பதற்கு உங்களை போல் இருக்கிறேனா? இது என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட்’ எனபதிவிட்டு  சமந்தாவின் டிவிட்டர் ஐடியை டேக் செய்திருந்தார். இதைக்கண்ட சமந்தா ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என அவருக்கு பதிலளித்துள்ளார். இதற்கு பவித்ர லட்சுமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும்  ‘உங்களின் நான் ஒரு சதவீதம் கூட கிடையாது. நன்றி மேடம்’ என உருகியுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News