எலும்பும் தோலுமாய் இருந்த பவித்ரா லட்சுமி - உடல்நிலை இப்போ எப்படி இருக்கு?

 
pavithra lakshmi

பவித்ரா லட்சுமி: 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் பவித்ரா லட்சுமி. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னதாக மாடலிங் துறையில் பணியாற்றி வந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட பவித்ரா லக்ஷ்மி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அட்ராசிட்டி செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனிடையே கடந்த வருடம் பவித்ரா லட்சுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஒல்லியாகி உடல் மெலிந்து போனது.

pavithra lakshmi

உடல்நல பிரச்சனை: 

இதை பார்த்து ரசிகர்கள் அவர்களுக்கு என்ன பிரச்சனை? என கேட்ட போது... நான் மிகவும் மோசமான உடல்நல பிரச்சனையில் இருக்கிறேன். அதற்காக முறையான சிகிச்சை தற்போது மேற்கொண்டு வருகிறேன். சிலர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். உண்மையிலேயே என் மீது அக்கறை வைத்துள்ளனர். 

என்னை சுற்றி இருக்கும் நண்பர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் எனக் கூறி தன்னுடைய உடல் பிரச்சனையில் இருப்பதை வெளிப்படையாக தெரிவித்தார்.  இந்த நிலையில் ஒரு வருடங்களுக்கு பிறகு பவித்ரா லட்சுமி நிலைமை என்ன என்று ஆராய்ந்து பார்த்தால்...

pavithra lakshmi

மீண்டும் பழைய பவித்ரா: 

அவர் தற்போது உடல் எடை கூடி மிகவும் அழகான பழைய நிலைமைக்கு வந்திருக்கிறார். அவர் இந்த லேட்டஸ்ட் வீடியோ அவரது ரசிகர்களை மனதிருப்தி அடைய செய்திருக்கிறது. எனினும் அவர் தன்னுடைய உடல்நல பிரச்சனை என்ன என்பது குறித்து இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags

From Around the web