இது போதும் எனக்கு...இது போதுமே - ஹேப்பி மூடில் பவித்ரா லட்சுமி!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை பவித்ரா லட்சுமி. இவர் இது தவிர திரைப்படங்களிலும் சிறு சிறு கதா பத்திரங்களில் நடித்து வந்தார் .

கண்மணி திரைப்படத்தில் கதாநாயகனாக துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் சக ஊழியராக ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நாய் சேகர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ச்சியாக மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே கடந்த ஆண்டு அவருக்கு உடலில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு உடல் மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக மாறிப் போனார் பவித்ரா லக்ஷ்மி. தற்போது அதிலிருந்து மீண்டு வந்த பழைய நிலைக்கு மாறியிருக்கிறார். தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் தனது அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு வரும் பவித்ரா லட்சுமி தற்போது பீச்சில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு எல்லோரையும் ஹேப்பி மூடுக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
