×

பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.. 3 ரசிகர்கள் மரணம்.. 4 பேர் உயிருக்கு போராட்டம்

 

தெலுங்கில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவன் பவன் கல்யாண். சிரஞ்சீவியின் தம்பியான அவருக்கு ஆந்திராவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அரசியல் கருத்துக்களை தெரிவித்து மெல்ல மெல்ல அரசியலிலும் நுழைந்துவிட்டார்.

இந்நிலையில், அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே,தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு, அவரின் ரசிகர்களும் பேனர் வைப்பது, கட் அவுட் வைப்பது என பல வகைகளில் அவரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சித்தூர் மாவட்டத்தில் உள்ள சாந்திபுரம் பகுதியில் பவன்கல்யாணுக்கு 25 அடி உயர பேனர் வைக்கும் முயற்சியில் அவரின் ரசிகர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி 3 ரசிகர்கள் மரணமடைந்தனர். அதேபோல், மேலும் 4 பேர் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அவர்கள் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்பதால் பலி எண்ணிகை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News