Categories: Cinema News latest news

இது பேய் படமா? பிட்டு படமா?.. பாயல் ராஜ்புத்தின் செவ்வாய்க்கிழமை டிரெய்லரை அவர் ரிலீஸ் பண்ணிருக்காரே!..

அஜய் பூபதி இயக்கத்தில் பாயல் ராஜ்புத் நடிப்பில் உருவாகி உள்ள தெலுங்கு படமான மங்களவாரம் தமிழில் செவ்வாய்க்கிழமை எனும் டைட்டிலில் உருவாகி உள்ளது.

ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் எல்லாம் வெளியாகி ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: நீங்க வெளியில போய் சண்டை போடுங்க.. பொடணியில் தட்டி வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்..!

இது பேய் படமா? சாமி படமா? அல்லது பிட்டுப் படமா? என தெரியாத அளவுக்கு ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர். அந்த அளவுக்கு செவ்வாய்க்கிழமையில் ஏகப்பட்ட கில்மா காட்சிகள் நிறைந்து உள்ளன.

மேலும், அந்த சந்தேகத்தை இன்னும் ஒருபடி அதிகமாக அதிகரிக்கும் வகையில் கிளைமேக்ஸ், நேக்கட், டேஞ்சரஸ் உள்ளிட்ட தாறுமாறான சம்பவ படங்களை இயக்கி உள்ள ராம் கோபால் வர்மாவை வைத்து இன்று வெளியிட்டுள்ளது தான் ஹைலைட்டே என்கின்றனர்.

இதையும் படிங்க: குஷி படத்தில் ‘கண்டபடி கட்டிப்பிடி’ இதுக்கு என்ன அர்த்தம் சார்? பதிலை சொல்லி அதிர்ச்சி கொடுத்த வைரமுத்து

த்ரில் கிளப்பும் பேய் படமாக காட்டப்பட்டாலும், ஆடையணியாமல் நாயகி பாயல் ராஜ்புத் வெட்ட வெளியில் பாத்டப்பில் அந்த கோலத்தில் படுத்துக் கிடக்கும் காட்சிகள், மற்றும் உடலுறவு கொள்ளும் விவகாரமான காட்சிகள் என டிரெய்லர் முழுக்கவே படம் வெளியான முதல் நாளே பார்த்து விட வேண்டும் என்கிற வகையில் அஜய் பூபதி ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார் என்று தான் தெரிகிறது.

பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இந்த திரைப்படம் வரும் நவம்பர் 17ம் தேதி வெளியாகப் போவதாகவும் டிரெய்லர் முடிவில் அறிவித்து ரசிகர்களை ஆயத்தப்படுத்தி உள்ளனர்.

Saranya M
Published by
Saranya M