×

வரிசை கட்டும் பாலியல் புகார்கள்... வாயை மூடிய ஒய்.ஜி.மகேந்திரன்.. அழுத்தம் கொடுக்கும் சின்மயி!!!

பத்மா சேஷாத்ரி பால பவனின் முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்கள் பள்ளியில் பணிபுரியும் காமர்ஸ் ஆசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்களை எழுப்பியுள்ளனர். 

 
maxresdefault

பத்மா சேஷாத்ரி பால பவனின் முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்கள் பள்ளியில் பணிபுரியும் காமர்ஸ் ஆசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்களை எழுப்பியுள்ளனர். 

அந்த ஆசிரியர் பல ஆண்டுகளாகவே பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாக அந்த ஆசிரியர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு சில முன்னாள் மாணவர்களும் திரைப் பிரபலங்களும் இதை பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.

இதுபற்றி அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ள பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் டீன், தாளாளர்  ஷீலா ராஜேந்திரன் உள்ளிட்டோர், கேள்விக்குரிய அந்த ஆசிரியரைப் பற்றியோ அல்லது இப்படியான புகாரோ இதுவரையில் தங்களின் பார்வைக்கு வரவில்லை என்றும், தற்போது எழும் புகார்களில் குறிப்பிடப்படுவது மாதிரியான குற்றச் செயல்களை எந்த அளவிலும் பள்ளி நிர்வாகம் ஏற்காது என்றும் தெரிவித்துள்ளனர்.


அதே சமயம் தங்களது மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட தங்கள் நிர்வாகம் இதுகுறித்து தகுந்த விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிகைக்கள் எடுக்குமென்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் அந்த ஆசிரியர் மீதான புகார்கள் பின்வருமாறு நிற்கின்றன. அதாவது ஆபாசப் படங்களை அனுப்புதல், மாணவர்களின் தோற்றத்தைப் பற்றி ஆபாசமாகப் பேசுவது, பாலியல் ஈர்ப்பு நோக்கங்கள் நிறைந்த நகைச்சுவைகளை மாணவர்களுக்கு சொல்வது, வழக்கமில்லாத நேரத்தில் மாணவர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் செய்வது, தேவையின்றித் தொடுவது, மற்றும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும்போது அநாகரிகமாக தோன்றுவது உள்ளிட்டவை நடப்பதாக அந்த ஆசிரியர் மீது புகார்கள் வரிசைகட்டி எழுந்துள்ளன.

இதனிடையே அந்த ஆசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்யக் கோரி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளி டீனுக்கு புகார் கடிதம் எழுதி, இது குறித்து விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். 

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.மேலும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், பாடகி சின்மயி, இளம் திரைப்பட நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி, பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கோரியுள்ளனர்.

மேலும், இந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ஆசிரியர் மீது விசாரணை நடத்தப்படும் என்றும், அது உண்மை எனக் கண்டறியப்பட்டால், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின்  தலைமையிலான பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.இதேபோல் இதுபற்றி ஊடகங்களிடம் பேசியுள்ள ஒய்.ஜி.மகேந்திரன், “பிஸ்பிபி பள்ளியை நானோ என் மகள் மதுவந்தியோ நடத்தவில்லை. நான் அந்த பள்ளியில் ஒரு டிரஸ்டீ தான். என் தம்பியும் தம்பி மனைவியும் தான் வழிநடத்துகிறார்கள். இது சம்மந்தமாக விசாரித்து நடவடிக்கையை முடுக்க வேண்டும் என பள்ளிக்கு ஒரு மெயில் அனுப்பியுள்ளேன். மேலும் இந்த புகார்களினால் என் தாயுடைய பெயர் கெட்டுப் போய்விடக் கூடாது. ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இதற்கு முன்பாக எழவில்லை என பள்ளித்தரப்பில் இருந்து பதில் வந்தது.” என குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News