×

நயன்தாரா படம் பெற்ற மிகப்பெரிய கௌரவம்... விக்னேஷ் சிவன் பெருமிதம்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான கூழாங்கல் படம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றிருக்கிறது. 
 

`ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ள `கூழாங்கல்’ படம் 50-வது ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் `டைகர்’ விருது பெற்றிருக்கிறது. இந்த விருதைப் பெறும் முதல் தமிழ்ப் படம் இதுவாகும். இதுகுறித்து இயக்குனர் வினோத்ராஜ், ``மிகவும் நெகிழ்ச்சியான தருணம். கூழாங்கல் படம் `டைகர் விருது - 2021’ வென்றிருக்கிறது. எங்கள் கடின உழைப்பு, பொறுமை மற்றும் கனவு நனவாகியிருக்கிறது. உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’’ என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். 


ரோட்டர்டாம் பட விழாவில் கூழாங்கல் படம் கடந்த வியாழக்கிழமை திரையிடப்பட்டது. அப்போது தயாரிப்பாளர்களான நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோரும் படக்குழுவோடு அந்த விழாவில் கலந்துகொண்டனர். குடிகாரக் கணவன் கொடுமை தாங்காமால் தனது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்ட தாயைத் தேடி அவரது மகனும் தந்தையும் செய்யும் பயணத்தை இந்தப் படம் விளக்குகிறது. தந்தை கதாபாத்திரத்தில் கருத்தடையானும் மகன் கதாபாத்திரத்தில் செல்லப்பாண்டி என்ற சிறுவனும் நடித்திருக்கிறார்கள். 

இதுகுறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள வீடியோவில், `டைகர் விருது பெறும் முதல் தமிழ்ப்படம் கூழாங்கல். வினோத்தின் கடின உழைப்பு, முதல் படத்திலேயே அவருக்கு இந்த கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது’ என்று பாராட்டியிருக்கிறார்.  

From around the web

Trending Videos

Tamilnadu News