Peddi Box office : 9 நாட்களில் 366 கோடி...வசூலில் அடித்து ஆடும் பெத்தி
ராம்சரண், ஜான்விகபூர், ஷிவ் ராஜ்குமர் உள்ளிட்ட பல்ர் நடித்து வெளிவந்திருக்கும் படம் பெத்தி. புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ள இந்த பட ஒரு ஸ்போர்ட்ஸ், செண்டிமெண்ட், கிளாமர் என கலந்துகட்டி கொடுத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருந்தது. படத்தில் இடம்பெற்ற கிரிகெட் போட்டிகள், மல்யுத்த பயிற்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சைகள் அற்புதமாக படமாக்கப்படிருந்தன. படம் குறித்து கலவையான விமர்சனக்களே வந்தாலும் கலெசனில் பாதிப்பு இல்லை என்றே கூறுகிறார்கள்.

இந்த நிலையில் பெத்தி வெளியாகி 9 நாட்கள் கடந்த நிலையில் இப்படத்தின் வசூல் குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். அதன்படி 9 நாட்களில் உலகளவில் ரூ. 366 கோடி வசூல் செய்துள்ளது இப்படம். இதன் மூலம் தென்னிந்தியாவில் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்தில் பெத்தி உள்ளது.
