Peddi Box Office: இரண்டு நாளில் ரூ. 150 கோடி பாக்ஸ் ஆபீஸ் வேட்டை! – பெத்தி சாதனை!

ராம் சரண் நடிப்பில் நேற்று முந்தினம் வெளியான படம் பெத்தி. புச்சி பாபு சனா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தில்  ஜான்வி கபூர்,ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
 
beddi movie

ராம் சரண் நடிப்பில் நேற்று முந்தினம் வெளியான படம் பெத்தி. புச்சி பாபு சனா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தில்  ஜான்வி கபூர்,ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைய்யில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் அடித்துள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  கேம்சேஞ்சர் படுதோல்வியை அடுத்து இந்த படத்தை ராம் சரண் மிகவும் எதிர்பார்த்தார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. படம் பாசிடிவான விமர்சங்னகளையே பெற்று வருகிறது.  இதையடுத்து படம் வெளியான இரண்டு நாட்களிலேயே  பாக்ஸ் ஆபீஸில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

beddi movie

இந்த நிலையில் பெத்தி படத்தின் 2ம் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. sacnilk இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி மொத்தம் 10113 காட்சிகள் நடைபெற்ற நிலையில்

உலகளாவிய மொத்த வசூல் (Worldwide Gross): ரூ. 150.49 கோடி

ஓவர்சீஸ் மொத்த வசூல் (Overseas Gross): ரூ. 36.00 கோடி (வெளிநாடுகளில் மட்டும்)

இந்தியாவின் மொத்த வசூல் (India Gross): ரூ. 114.49 கோடி
இந்தியாவின் நெட் கலெக்சன் ( India net collection) ரூ. 96.40 கோடி

250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம், முதல் நாளிலேயே உலகளவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளிலும் வசூல் குறையாமல், தற்போது ₹150 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்து வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால், அடுத்த இரண்டு நாட்களில் படத்தின் வசூல் மிக வேகமாக ரூ. 200 கோடியை எட்டும் என்று சினிமா வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

From Around the web