Peddi Box Office : 3 நாட்களிலேயே 200 கோடியை நெருங்கிய பெத்தி
தெலுங்கில் முன்னணி நடிகரான ராம் சரண் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பெத்தி. புச்சி பாபு சனா இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. டிரைலர் வெளியானபோதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அமிகுந்த எதிர்பார்ப்புகளுகிடையே வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் அடித்துள்ளன.
பெத்தி வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.135.36 கோடி வசூல் செய்து இந்த ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனிங் படங்களில் ஒன்றாக மாறியது. முதல் நாள் வசூல் சாதனையைத் தொடர்ந்து இரண்டாவது நாளிலும் இத்திரைப்படம் நல்ல வசூலையே பெற்றது. இரண்டாவது நாளிலேயே ரூ 150 கோடி வசூலை பெற்றது.

இந்த ந் இலையில் இப்படத்தின் 3ம் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. sacnilk இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி மொத்தம் 9019 காட்சிகள் நடைபெற்ற நிலையில் படத்தின் மொத்த வசூல் இந்திய அளவில் ரூ 149.07 கோடி, நிகர வசூல் ரூ 125.25 கோடியாகவும் வசூல் செய்துள்ளது. உலகளவில் ரூ 191.07 கோடி வசூல் செய்துள்ளது. இன்றும் விடுமுறை நாள் என்பதால் வசூல் 200 கோடியை தாண்டிவிடும் என்பது உண்மை.
