பாக்ஸ் ஆபீஸில் சிக்ஸர், குஸ்தி என அந்தர் பண்ணும் ராம்சரண்!.. பெத்தி வசூல் இதுவரை இத்தனை கோடியாம்!

 
ram

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’  திரைப்படம் வெளியாகிய முதல் நாளிலேயே உலகளவில் ரூ.135.36 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது. படத்தின் பிரம்மாண்டமான ஓப்பனிங் வசூல் ரசிகர்களையும், திரையுலக வட்டாரங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்த விளையாட்டு பின்னணியிலான ஆக்‌ஷன் திரைப்படத்தில் ராம் சரணுடன் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, போமன் இரானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம், 1980களின் ஆந்திர கிராமப்புற வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

peddi

சமூக அங்கீகாரத்திற்காகவும், தனது சமூகத்தின் மரியாதைக்காகவும் போராடும் இளைஞனின் பயணத்தை மையமாகக் கொண்டுள்ள இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு ஏற்றவாறு ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள படம், முதல் நாளிலேயே உலகளவில் ரூ.135.36 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்திற்குப் பிறகு ராம் சரணின் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலாக இது பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற முன்பதிவுகள், ரசிகர்களின் கொண்டாட்டங்கள் மற்றும் நேர்மறையான விமர்சனங்கள் ஆகியவை இந்த வசூலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

முதல் நாளிலேயே ரூ.135.36 கோடியை கடந்துள்ள ‘பெத்தி’, வரும் நாட்களிலும் இதே வேகத்தைத் தொடரும் பட்சத்தில் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களில் ஒன்றாக மாறும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளன.

புக் மை ஷோவில் 3 மில்லியன் டிக்கெட்டுக்கள் அதாவது 30 லட்சம் டிக்கெட்டுகள் அதற்குள் விற்றுத் தீர்ந்துள்ளன. ஒரு கோடிக்கும் அதிகமான டிக்கெட் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

From Around the web