
latest news
Pushpa 2: இந்திய சினிமாவில் ‘புதிய’ சாதனை… டிவி உரிமையை ‘மொத்தமாக’ தூக்கிய நிறுவனம்!
Pushpa 2: தற்போது இந்தியா முழுவதுமே புஷ்பா பீவர்தான். சமீபத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் கலந்துகொண்ட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு பீகாரில் திரண்ட கூட்டமே இதற்கு சாட்சி. பல லட்சம் பேர் ஒன்றுகூடி பெரிய அரசியல் கூட்டங்களையே தோற்கடித்து விட்டனர்.
டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. முதல் பாதி மிரட்டலாக முடிந்ததால் இரண்டாவது பாகமும் அதேபோல இருக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக பஹத் பாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ் என ஏராளமான நட்சத்திரங்கள் அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடித்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: மாட்டிக்கிட்ட மனோஜ்… வசமாக சிக்கிய கோபி… காவல் நிலையம் வந்த ராஜி!..
முதல் பாகத்தில் அயிட்டம் டான்ஸ்க்கு சமந்தா ஆடியிருந்தார். இரண்டாவது பாகத்தில் இளம்நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு ஆட வைத்துள்ளனர். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் ரிலீஸ்க்கு முன்பே பெரும் லாபத்தை ஈட்டியிருக்கிறது. மியூசிக், ஓடிடி ரைட்ஸ் 425 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

#image_title
இந்தநிலையில் உலகம் முழுவதும் புஷ்பா 2 படத்தின் டிவி உரிமையை பிரபல நிறுவனமான பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. எத்தனை கோடி ரூபாய்க்கு விலை போனது என்பதை பரம ரகசியமாக வைத்துள்ளனர்.
ஆனால் இதுவரை எந்தவொரு படத்திற்கும் கொடுக்காத ஒரு தொகையை இதற்காக அந்நிறுவனம் கொடுத்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: ஒன் டே வில் கம்! கூப்பிட்டு வச்சு அஜித்தை அவமானப்படுத்திய இயக்குனர்.. யார் தெரியுமா?