×

எஸ் பி பி சமாதியைப் பார்க்க மக்களுக்கு அனுமதி!

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்தின் நினைவிடத்தை மக்கள் பார்வைக்காக திறந்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்தின் நினைவிடத்தை மக்கள் பார்வைக்காக திறந்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று சிகிச்சைப் பலனளிக்காமல் செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானார். இது உலகம் எங்கும் உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்களால் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து இப்போது பொதுமக்கள் அவரது நினைவிடத்தைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமுக இடைவெளியுடன் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News