×

தமிழ்நாட்டில் கொரோனா பரவுவதற்கு மக்கள் தான் காரணம்-பகீர் தகவலை வெளியிட்ட முதல்வர்!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க மக்கள்தான் காரணம் என முதல்வர் பழனிசாமி சாடியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலர் உள்பட உயர் மட்ட அதிகாரிகளுடன் கொரோனா தொற்று தொடர்பாகச் செவ்வாய்க் கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் கொரோனா எண்ணிக்கை குறித்து விவாதித்தப்பட்டது.

 

இந்த சூழலில் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர், "ஊரடங்கு நேரத்தில் மக்கள் மிகவும் அலட்சியமாக வெளியே வருகிறார்கள். மக்களின் இந்த அலட்சியமே நோய்ப் பாதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது" எனச் சாடியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் "தமிழ்நாட்டில் கொரோனா சமூக தொற்றாக மாறும் சூழல் உள்ளது" என முதல்வர் பழனிசாமி கூறியது சர்ச்சையை கிளப்பியது. குறிப்பாகத் தலைமைச் செயலர் சண்முகம் "தமிழ்நாட்டில் கொரோனா சமூக தொற்று என்ற நிலைக்குச் செல்லவில்லை" எனக் குறிப்பிட்டிருந்த அதே நாளில் முதல்வர் மேலே குறிப்பிட்ட கருத்தைத் தெரிவித்திருந்தார்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாகத் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்து விட்டது. சோதனைகள் ஒரு மாதத்திற்கு மேலாக நடத்தப்பட்டுள்ளபோதும் இப்போதுதான் ஒரு லட்சம் பேருக்குச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. சோதனைகளை அதிகப்படுத்தாமல் முதல்வர் இந்த கருத்தைக் கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் பழனிசாமி குறிப்பிடுகையில், "சென்னை, மதுரை, திருச்சி, கோவை மாவட்டங்களில் மக்கள் அதிகளவில் மார்கெட்டில் கூடுவதால்தான் இந்த பிரச்சினை. மக்களிடம் நாம் சொல்வதையெல்லாம் அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார்கள். மக்களுக்குச் சுத்தமாக கொரோனாவின் ஆபத்து புரியவில்லை" என்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News