Connect with us

Cinema News

அவரை காப்பாத்துறதே பெரும் கஷ்டமாயிடுச்சு.. படப்பிடிப்பில் ரஜினியை தாக்கிய கும்பல்.. இப்படியும் நடந்துச்சா?

தமிழ் சினிமாவில் கதாநாயகனாவது என்பது பல நடிகர்களுக்கு பெரும் கடினமான விஷயமாகவே இருந்துள்ளது. அதுவும் இப்பொழுது சினிமாவில் இருக்கும் அளவிற்கு அப்பொழுது வாய்ப்புகள் இருக்கவில்லை.

வளர்ந்து வந்த தொழில்நுட்பம் காரணமாக ஒவ்வொரு நடிகரும் தன்னை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் தற்சமயம் அதிகமாகவே உள்ளது. ஆனால் முன்பெல்லாம் திரையின் மூலமாக மட்டுமே அவர்கள் மக்களிடம் வரவேற்பு பெற முடியும் என்கிற நிலை இருந்தது.

அப்போது நடிகர்கள் பலரும் உருவ கேலிக்கு உள்ளானார்கள். சிவாஜி கணேசனில் துவங்கி பல நடிகர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் ரஜினிக்கும் இந்த விஷயம் நடந்துள்ளது. கருப்பு நிறத்தில் இருக்கும் ஒரு நபரை அவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக ரஜினி பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.

ரஜினிக்கு நடந்த சம்பவம்:

1981இல் இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் நெற்றிக்கண். நெற்றிக்கண் திரைப்படம் இப்போது வரை மக்கள் மத்தியில் பேசப்படக்கூடிய ஒரு திரைப்படமாக உள்ளது. இந்த திரைப்படத்தில் ரஜினி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதை படமாக்குவதற்காக ஒரு முறை மெடிக்கல் காலேஜ் ஒன்றிற்கு சென்றுள்ளனர் பல குழுவினர்.

அப்பொழுது படப்பிடிப்பு துவங்கும் நேரத்தில் படப்பிடிப்பை பார்த்துக் கொண்டிருந்த குழுவினர் திடீரென ஓடி வந்து ரஜினி மற்றும் மற்ற நடிகர்களை அடிக்க துவங்கியுள்ளனர். அதிலிருந்து மிகவும் சிரமப்பட்டு ரஜினியை காப்பாற்றியுள்ளனர் படக்குழுவினர். அந்த சமயத்தில் அவரது கருப்பு நிறத்தின் காரணமாக பலரால் விமர்சிக்கப்பட்டு வந்திருந்தார் ரஜினி அதன் காரணமாக அந்த தாக்குதல் நடந்தது. இதை நடிகர் குண்டு கல்யாணம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top