×

புஷ்டிக்கா இருந்த கீர்த்தி சுரேஷா இது...? பழைய சோறு தின்னு உடம்ப தேத்துமா!
 

நாளுக்கு நாள் துரும்பா இளைத்துப்போகும் கீர்த்தி சுரேஷ் 
 
 

தமிழ் சினிமாவில் "இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான "மகாநடி" படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

இப்படியான நிலையில் புசு புசுன்னு இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப நாட்களாக உடல் எடையை பாதியாக  ஸ்லிம்மாக மாறிவிட்டார். எல்லாம் பட வாய்ப்புக்காக தான் என்று கூறி அனைவரையும் ஆஃப் செய்துவிட்டார். ஆனால், அவரது தீவிர ரசிகர்களுக்கு இந்த ஒட்டிப்போன கீர்த்தியை சுத்தமாக பிடிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது தனது கல்லூரி நண்பரின் திருமணத்தில் பிங்க் கலர் பட்டுப்புடவை அணிந்துக்கொண்டு எடுத்த லட்சணமான புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ஒல்லியான தேகத்தை காட்டி வருத்தப்பட வைத்துள்ளார். ப்ளீஸ் கீர்த்தி... நல்லா பழைய சோறு, நெய் தோசை, ஃபுல் மீல்ஸ் இப்படி கட்டு கட்டுன்னு கட்டி உடம்ப தேத்துமா... இது எல்லா ரசிகர்களின் அன்பு கட்டளை. 


 

From around the web

Trending Videos

Tamilnadu News