×

முழு ஊரடங்கில் திருமணத்திற்கு இ பாஸ் விண்ணப்பிக்க முடியாது - புதிய மாற்றம்

 
epass

இந்தியா முழுவதும் கொரோனா 2 வது அலை வீசி வருகிறது. எனவே,  தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 35 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. 

எனவே, கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அறிமுகப்படுத்தியது. ஆனால், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.  எனவே, கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.      

அதனைத்தொடர்ந்து தளர்வுகள் இன்றி மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நாளை முதல் கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.  காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள் உட்பல எந்த கடையும் திறக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இ-பாஸ் முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் பதிவுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. அதேநேரம், மருத்துவ காரணங்களுக்கு மாவட்டத்திற்குள் செல்ல இ பாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருமணத்திற்கு இ பாஸ் விண்ணப்பிக்க முடியாது. இ பாஸ் விண்ணப்பிக்கும் பதிவில் திருமணம் என்கிற ஆப்ஷனே நீக்கப்பட்டுள்ளது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News