முதல்வர் பிரச்சாரத்திற்கு அமோக வரவேற்பு - அலைகடலென திரளும் பொதுமக்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். மக்களுக்கு சிறந்த நல திட்டங்களை செயல்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ளதால் மாவட்டம் மாவட்டமாக அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்திற்காக அவர் செல்லும் இடங்களில் மக்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு வழி எங்கும் மலர் தூவி ஈரோடு மக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு தொண்டரின் குழந்தையை தூக்கி கொஞ்சினார். அதன்பின் பொதுமக்கள் முன்பு பேசி வாக்குகள் சேகரித்தார். அதையடுத்து, எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே என காட்டும் வகையில் பொதுமக்கள் தங்கள் விரல்களை காட்டி முதல்வருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினர்.
அதிமுக தொண்டர்கள் தங்கள் கைகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் இரட்டை இலை புகைப்படங்கள் இடம் பெற்றிருந்த அட்டைகளை முதல்வருக்கு காட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.