×

பிரச்சாரத்தில் மாஸ் காட்டும் முதல்வர்... மக்களிடையே அமோக வரவேற்பு...  

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். மக்களுக்கு சிறந்த நல திட்டங்களை செயல்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார்.

குறிப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசு பொருட்களை வழங்க அவர் உத்தரவிட்டது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த வரும் மக்கள் தங்களின் பொங்கல் செலவிற்கு இப்படம் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.

eps

இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வருவதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை துவங்கியுள்ளன. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்து வரும் பிரச்சாரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ஏனெனில், பிரச்சாரம் செய்யும் போது அவர்கள் மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்து வருகிறார்.  மேலும், அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை எடுத்துரைத்து அவர் வாக்குகள் சேகரித்து வருகிறார்.

எனவே, அவர் செல்லும் இடமெங்கும் அலை கடலாய் மக்கள் திரண்டு அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். மேலும், அதிமுக அமுல்படுத்திய திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட பள்ளி, அக்ல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜி.பி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார்.

இதன் காரணமாக 3வது முறையாக அதிமுகவே ஆட்சி அமைக்கும் என கருதப்படுகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News