Connect with us
dikkilona

latest news

பேர் வச்சாலும்’ பாடல் இத்தனை கோடி பார்வையைப் பெற்றதா? பல சாதனைகளை முறியடித்த பாடல்!!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி முத்திரை பதித்தவர்களில் சந்தானம் முக்கியமானவர். ஆரம்பத்தில் காமெடியனாக நடித்துவந்த இவர், காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறிய சிவகார்திகேயனைப் பார்த்து தானும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். காமெடியனாக இருந்தபோது இவரை மட்டுமே நம்பி தியேட்டருக்கு வந்தவர்கள், இவர் ஹீரோவாக ஆனபின் இவரை நம்பி தியேட்டருக்கு வர தயாராக இல்லை. காரணம் இவர் நடிக்கும் படங்கள் எதுமே சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை.

இவர் காமெடியனாக நடித்தபோது, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், சிறுத்தை, கலகலப்பு, ஒருகால் ஒரு கண்ணாடி ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றதென்றால் அதில் சந்தானத்தின் பங்கு மிகப்பெரிய பலம்.

mikel-madana-kaamarajan

mikel madana kaamar

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு என ஒரு சில படங்களைத்தவிர வேறு எந்த படங்களும் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி இவர் நடித்த டிக்கிலோனா படம் ஓடிடியில் வெளியானது.

கார்த்திக் யோகி என்பவர் இயக்கியிருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் நல்ல விமர்சனத்தைப் பெறவில்லை. ஆனால், இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘பேர் வச்சாலும்’ பாடல் பெரிய அளவில் வெற்றிபெற்று இளசுகள் மத்தியில் வைரலானது.

இப்பாடல் 1990ல் கமல் நடிப்பில் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்றிருந்தது. இளையராஜா இசையமைத்திருந்த இப்பாடலை சிறிய மாற்றத்துடன் டிக்கிலோனா படத்தில் பயன்படுத்தியிருந்தார் யுவன். பாடலுக்காகவும் ஒரே ஒரு சிறிய டான்ஸ் மூவ்மெண்ட்க்காகவும் இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெட்ரா இப்பாடல் இதுவரை யூடியூப் பக்கத்தில் 2 கோடிக்கும் மேல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகின்றது.

author avatar
adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top