×

பெரியார் விவகாரம் ; ரஜினி வீட்டின் முன்பு போராட்டம் : போலீசார் குவிப்பு

பெரியார் குறித்து ரஜினி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் வீட்டின் முன்பு தந்தை திராவிட கழகத்தினர் போராட்டம் அறிவித்திருப்பதால் போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசிய ரஜினி ‘ பெரியார் இந்து கடவுள்களுக்கு எதிராக விமர்சித்து பேசினார். அதை யாருமே எழுதவில்லை. ஆனால், சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார். இதனால், துக்ளக் பத்திரிக்கை நாடு முழுவதும் பிரபலம் ஆனது’ எனப்பேசினார்.

இதைத் தொடர்ந்து பெரியார் பற்றி சரியாக தெரியாமல், வரலாற்றை ரஜினி தவறாக பேசியதாக திராவிட விடுதலை கழகம் மற்றும் பெரியார் திராவிட கழகம் போன்ற சில அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் அவரின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதுபற்றி ரஜினி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இன்று காலை ரஜினியின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து ரஜினியின் வீட்டிற்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News