Preethi Mukundan : ஏஜெண்ட் டீனாதான் என் ரோல் மாடல் ! - பிளாஷ் பட நாயகி பிரீத்தி முகுந்தன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் பிரீத்தி முகுந்தன். 2024ம் ஆண்டு கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படம் ம்மூலம் அறிமுகம் ஆனார்
 
preethi mukunthan

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் பிரீத்தி முகுந்தன். 2024ம் ஆண்டு கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படம் ம்மூலம் அறிமுகம் ஆனார். முதல் படம் பெறிய வெற்றியை பெறவில்லை. இதையடுத்து அதவா நடித்த இதயம் முரளி என்ர படத்தில் நடித்து முடித்தார். ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் அர்ஜூனுடன் இவர் நடித்த பிளாஸ்ட் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படம் மூலம் பிரீத்தி அனைவாஅரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

சமீபத்தில்  பிரீத்தி முகுந்தன் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்தும், தனது சினிமா ஆசைகள் குறித்தும் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,

preethi mukunthan

பிளாஸ்ட் படத்திற்காக நான் கராத்தே கற்றுக்கொண்டேன். படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்சன் காட்சிகளுக்கு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான  விக்ரம்  படத்தில் வந்த ஏஜெண்ட் டீனா  கதாபாத்திரம் தான் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அந்த அளவுக்கு மாஸான ஆக்சன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை என்று  தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு படத்திலும் ஒரே மாதிரியான ரோல்களில் நடிக்காமல், வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன். தற்போது கதைகளை மிகவும் நிதானமாகத் தேர்வு செய்து வருகிறேன். படம் வெளியான பிறகு அதற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து, அடுத்தடுத்த படங்களை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன்  என கூறினார். 

From Around the web