×

மீண்டும் வனிதா வாழ்வில் சிக்கல் - பீட்டர் பாலின் மனைவி போலீசில் புகார்!

நடிகை வனிதா - பீட்டர் பால் என்பவரை நேற்று ஜூன் 27ம் தேதி மூன்றாம் திருமணம் செய்துகொண்டு புது வாழ்க்கை துவங்கியுள்ளார். இந்நிலையில் பீட்டர் பால் மனைவி  எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பாலுக்கு  2 குழந்தைகள் இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக  தனியாக வாழ்ந்து வருகின்றனர். முறையாக விவாகரத்து கூட பெறாமால் தற்போது வனிதாவை திருணம் செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். பீட்டரே விவாகரத்து பெற்ற பிறகு திருமணம் செய்துகொள்கிறேன் என கூறியும்  அதை பின்பற்றாமல் வனிதாவை செய்து கொண்டார் என்று  அந்த புகாரில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வனிதாவின் திருமண வாழ்க்கை பிரச்சனையாகவே முடிந்த நிலையில் இந்த மூன்றாம் திருமணம் நடந்த அடுத்த நாளே இப்படி பிரச்னையில் சிக்கியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News