×

மகளை மடியில் சாய்த்து கொண்டிருக்கும் பீட்டர் பால்  - புது உறவில் நெகிழும் வனிதா!  

நடிகை வனிதா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகைப்படங்களை பதிவிட்டு வெளிப்படுத்தி வருகிறார். இன்ஸ்டாவில் கணவர் பீட்டர் பால் மகளை பாசமாக பார்த்துக்கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு "உண்மையான அப்பா இல்லாத அனைவருக்கும் இந்த புகைப்படம் சான்று" என கூறியுள்ளார்.

 

மேலும், உண்மையான அப்பா என்பது வேறு, பாசத்தை காட்டும் அப்பா என்பது வேறு. ஒரு நல்ல அப்பா ஒரு நல்ல அம்மாவுக்கு சமம். ஒரு நல்ல அம்மா அனைத்துக்கும் சமம் என கூறியுள்ளார்.   நடிகை வனிதா  பீட்டர்பால் என்ற அனிமேஷன் இயக்குனரை  கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். வனிதாவின் இந்த மூன்றாம் திருமணம்  முடிந்த அடுத்த நாளே பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

தனது கணவர் பீட்டர்பால் தனக்கு விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  புகார் மனுவில் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இப்படி எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி தன் புதுமண வாழ்வை வனிதா திருப்தியுடன் வாழ்ந்து வருகிறார்.

View this post on Instagram

To all those who never had a real dad...

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

From around the web

Trending Videos

Tamilnadu News